மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சம்: நீட் தேர்வு எழுதிய மாணவியின் விபரீத முடிவு

கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து கொள்ளுதின்னிபட்டி கிராமத்தில் வசிப்பவர்கள் சேகர் – லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், இவரது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ. (18) கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்.
image
ஆனால், குறைவான மதிப்பெண் (326 கட் ஆப்) பெற்றதால் எம்.பி.பிஎஸ் கிடைக்கவில்லை. கால்நடை மருத்துவருக்கான கட்ஆப் கிடைத்துள்ளது. ஆனால், எம்.பி.பி.எஸ் தான் படிப்பேன் எனக் கூறி வந்த அந்த மாணவி இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். இதையடுத்து பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவி, நேற்று மாலை; தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து வெளியே சென்றிருந்த பாட்டி வீட்டிற்கு வந்த பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவியின் பெற்றோருக்கும், லாலாபேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
image
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில், குறைவான மதிப்பெண் வந்து விடுமோ என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக உறவினர்களிடம் கூறி வந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.