மீண்டும் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள்- இந்திய அணியின் கேப்டனாக கங்குலி நியமனம்

கொல்கத்தா,

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மகாராஜா அணி விவரம்:- கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி

உலக ஜெயிண்ட்ஸ் அணி விவரம்:- இயன் மார்கன்(கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.