ரிலீஸ் ஆனது கார்த்தி-ன் விருமன்.. முதல் ஷோவிற்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம்!
நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி, திரையரங்குகளில் 7 மணிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்கள் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்படும் நிலையில், இந்தப் படம் 7 மணிக்கே முதல் காட்சி தொடங்கியது.
‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘விருமன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் ஆகியவை ஹிட் அடித்துள்ள நிலையில், பெரும் எதிர்பாப்புகளுக்கு மத்தியில் இன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்திற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நடிகர் கார்த்திக் புரமோஷன் யுக்தியாக திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து ரசித்தது அவரது ரசிகர்களிடையே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Amazing responses
Catch #Viruman in theatres now!@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/Ry9FjTnozW
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 12, 2022
#AditiShankar ,
Your Genes are something else. Extraordinary performance from @AditiShankarofl and your dance is just Litt!! Cute expressions and brilliant acting. Kollywood’s gift.!#Shankar sir…!!#Viruman #RC15 #RamCharan pic.twitter.com/9fH7xiPklh— VCV (@Vishal_c_Victor) August 12, 2022