ரியல் ‘சிட்டி’ – சியோமி அறிமுகம் செய்த ஹியூமனாய்டு ரோபோ: மதிப்பு ரூ.82 லட்சம்

மனிதர்களின் உணர்வுகளை உணரும் ஹியூமனாய்டு ரோபோவை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் அப்படியே ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோவை நினைவுபடுத்துகிறது.

அந்தப் படத்தில் டாக்டர் வசீகரன் எப்படி மேடையில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்து வைப்பாரோ, அதேபோல இந்த ரோபோவின் அறிமுகமும் நடந்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சைபர்ஒன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள 01.52 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் தனது அறிமுகம் தொடங்கி தான் கற்றுள்ள வித்தைகள் குறித்தும் விவரிக்கிறது சைபர்ஒன ரோபோ. சிட்டியை போலவே மனித உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் தன்மையை இந்த ரோபோ பெற்றுள்ளதாம்.

Curved OLED பேனலை தனது முகமாக கொண்டுள்ளது சைபர்ஒன். அதில் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாம். அதன் மூலம் 3டி வழியில் உலகை காணவும், தனிநபர்களை அடையாளவும் காணவும் இந்த ரோபோவினால் முடிகிறதாம். இதன் உயரம் 177 சென்டிமீட்டர்.

“அனைவருக்கும் வணக்கம். நான் சைபர்ஒன். இப்போதுதான் நடக்க பழகி உள்ளேன். எனது உருவ வடிவமைப்பில் கீழ் பகுதி இன்னும் நிலையானதாக இல்லை. இருந்தாலும் இப்போது நான் குங்ஃபூ பயிற்சி செய்து வருகிறேன்” என தனது மேடை அரங்கேற்றத்தில் சைபர்ஒன் தெரிவித்துள்ளது. மேடையில் தன்னை அறிமுகம் செய்து வைத்த சியோமி தலைமை செயல் அதிகாரி Lei Jun-க்கு ‘பூ’ ஒன்றையும் கொடுத்து அசத்தியுள்ளது இந்த ரோபோ.

சைபர்ஒன் அறிமுகத்தை வீடியோ வடிவில் காண…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.