புதுடில்லி:மஹாராஷ்டிராவில் தற்போதைய அரசில் இடம் பெற்றுள்ள 15 அமைச்சர்கள் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை சேர்த்து, மொத்தம் 20 அமைச்சர்கள்உள்ளனர்.
இந்நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்று உள்ளவர்களின் விபரங்களை, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் விபரங்களை சேகரித்துள்ளோம். இதன்படி, மஹாராஷ்டிராவில் தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில், 15 பேர் மீது, பல்வேறு நீதிமன்றங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவருமே கோடீஸ்வரர்கள் தான். இவர்களது சராசரி சொத்து மதிப்பு, 47 கோடி ரூபாய். இவர்களில் அதிகபட்சமாக மங்கள் பிரபாத் லோதா என்பவருக்கு, 441 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement