வார நாட்களில் டிக்கெட் கட்டணம் குறைப்பு : நடைமுறைக்கு வருமா?

சென்னையில் உள்ள மால் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ஜிஎஸ்டி வரியுடன் 140 முதல் 190 வரை வசூலிக்கப்படுகிறது. தனி வளாக தியேட்டர்களில் 120 முதல் 150 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனி வளாக தியேட்டராக செயல்பட்டு வரும் வட பழனி கமலா தியேடட்டர் 120 ரூபாய் கட்டணத்தில் இருந்து 99 ரூபாயாக கட்டணத்தை குறைத்துள்ளது. இந்த கட்டண சலுகை ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மட்டுமே வழங்கப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுவாக தியேட்டர்களுக்கு மக்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வருகிறார்கள். மற்ற நாட்களில் தியேட்டர்கள் காத்து வாங்குகிறது. வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு செல்லும் மக்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பினால் மீண்டும் தியேட்டருக்கு செல்வதில்லை. இந்த நிலையில் வார நாட்களில் கட்டணத்தை குறைத்தால் குடும்பத்தோடு தியேட்டருக்கு வருவது அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

கமலா தியேட்டர் தொடங்கி உள்ள இந்த விஷயத்தை வார நாட்கள் முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும். மற்ற தியேட்டர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கை அதிகரித்துள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள் சுற்றுலா தலங்களில் வார இறுதி நாட்களுக்கு ஒரு கட்டணமும், வார நாட்களில் ஒரு கட்டணமும் வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.