சென்னை: விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர வேறு உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். வேறு உரங்கள், இடுபொருட்களை கொள்முதல் செய்ய விவசாயிகளை கட்டாயப்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விவசாயிகள் இதுதொடர்பான புகார்களை மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளரிடம் அளிக்கலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.