சமீபத்திய காலமாக பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பல பெண்கள் சர்ஜரி செய்து கொள்கின்றனர்.
அப்படி தன்னை ஒரு நடிகை போல அழகுபடுத்திக் கொள்ள, இளம்பெண் ஒருவர் 15 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளார்.
இதற்காக அவர் 48 லட்சம் ரூபாயினையும் செலவு செய்துள்ளார் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமே.
6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!
அழகாக மாற அறுவை சிகிச்சை
பிரபல பாலிவுட் நடிக்கையான கிம் கர்தஷியான் போல் மாறுவதற்கு ஏற்கனவே பல இளம்பெண்கள் சர்ஜரி செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது தென் கொரியாவை சேர்ந்த 28 வயது இளம்பெண் செர்ரி லீ என்பவரும், நடிகை கிம் கர்தஷியான் போல் மாறுவதற்கு, இளம் வயதில் இருந்தே பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவ்வளவு செலவா?
தனது 20 வயதில் இருந்து தொடங்கிய இந்த சர்ஜரியானது தற்போது வரையில் 15 முறை செய்துள்ளதாகவும், இதற்காக 48 லட்சம் ரூபாயினை செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செர்ரி லீ தான் கிம் கர்தாஷியனின் தீவிர ரசிகை என்றும், அவரை மிக பிடிக்கும் என்றும் செர்ரி லீ கூறியுள்ளார். மேலும் கிம் கர்தஷியானை போல மாறுவதற்கு தான் சிறுவயதில் இருந்தே முயற்சி செய்து வருவதாகவும், அதற்காக 48 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய பெண்ணா?
கிம்மினை போல மாற மூன்று முறை பின்னழகு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும, மார்பகங்கள், முக அழகுக்கும் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் அவரை யாரும் தென் கொரிய பெண் கூற மாட்டார்கள்.
இனி அறுவை சிகிச்சை இல்லை
அடுத்தகட்ட சிகிச்சையை இனி செய்ய விரும்பவில்லை என்றும், தான் விரும்பிய கட்டமைப்பை பெற்று விட்டதாகவும், தன் செயலுக்காக தான் விருப்படவில்லை என்றும், இருக்கும் ஒரு என்னவெனில் இந்த அறுவை சிகிச்சையை முன்பே செய்திருக்கலாம். ஏன் அதனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
யார் இவர்?
எனினும் தன்னை அழகு படுத்திக் கொள்ள இவ்வளவு பணம் செலவு செய்துள்ளாரே யார் இவர்? இவர் குறித்து வேறு முழுமையான விவரங்களும் வெளியாகவில்லை.
செர்ரி லீ- ன் இயற்பெயர் ஹான்பியோல் என்றும் , தனக்கு பிடித்த நடிகை போல தோற்றமளிக்க இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
A woman from South Korea spent 48 lakhs to beauty herself and underwent 15 surgeries
A woman from South Korea spent 48 lakhs to beauty herself and underwent 15 surgeries/48 லட்சம் செலவு செய்து சர்ஜரியா.. எதற்காக.. இளம்பெண் செய்த காரியத்தை பாருங்க.!