Nitish effect: இப்போது தேர்தல் நடந்தால் மோடியின் செல்வாக்கு என்னவாக இருக்கும்?
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றம் நாட்டின் எதிர்கால அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
பாஜக-வுக்கு ‘செக்மேட்’
* வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜக-வுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளன.
* இது மற்ற மாநிலங்களிலுள்ள எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக,
* இதுவரை மற்ற கட்சிகளுக்கு ‘செக்மேட்’ வைத்துக் கொண்டிருந்த பாஜகவுக்கு, மற்ற கட்சிகளும் அதைத் திருப்பிச் செய்ய முடியும் என்பதையும் பீகார் நிகழ்வு உணர்த்தி இருக்கிறது.
* மேலும், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக நடத்திக்காட்டிய அரசியல் மாற்றங்களையெல்லாம் மோடி – அமித் ஷாவின் சாமர்த்தியமான அரசியல் வியூகம் என்றும், அரசியல் சாணக்கியத்தனம் என்றும் அதன் ஆதரவாளர்கள் அடைந்த புளங்காகிதமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மறுக்கும் பாஜக
ஆனால் பாஜக தரப்பிலோ,
* ” பீகாரில் நடந்திருக்கும் அரசியல் மாற்றம் என்பது அந்த மாநிலத்திற்கு மட்டுமானதே. இதை தேசிய அரசியலுடன் முடிச்சுப்போட்டுப் பார்க்கத் தேவையில்லை.
* பீகாரைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சி காணாமலே போய்விட்டது. இடதுசாரிகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர மாநிலத்தில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை.
* மீதமுள்ள ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளையும் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
* தவிர, இதுநாள் வரை எங்களுடன் கூட்டணியில் இருந்ததால் நிதிஷ் கட்சிக்கு வாக்களிக்காமல் இருந்த இஸ்லாமியர்களும் இனி அந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்பதால், லாலு கட்சிக்குப் போய்க்கொண்டிருந்த இஸ்லாமியர்களின் வாக்குகளும் பிரியலாம்.
2024 வரை கூட்டணி நிதிஷ் – லாலு கூட்டணி தாக்குப்பிடிக்குமா?
இத்தகைய சூழலில், 2024 -ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் இவர்களது கூட்டணி நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
* தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு உள்ள எம்.எல். ஏ-க்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறைவான எம்.எல்.ஏ-க்களே உள்ளனர்.
அப்படி இருக்கையில்,
* தேர்தலையொட்டி கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பதில் பிரச்னைகள் வெடித்து இந்தக் கூட்டணி சிதறுண்டு போகும்.
* நிதிஷ் குமாரைப் பொறுத்தவரை அவர் தனது அரசியல் ஆதாயத்துக்காக எத்தகைய பல்டியையும் அடிப்பார்.
எனவே பீகார் அரசியல் மாற்றம் குறித்து நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை” என்று கூறுகின்றனர்.
பாஜக-வின் வாக்கு வங்கி எது?
இந்த நிலையில், பாஜக-வின் இந்தக் கூற்றை மறுக்கும் நிதிஷ் மற்றும் லாலு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ,
* ” பாஜக-வுக்குச் செல்வாக்கான மாநிலங்கள் என்றால் அது உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஹரியானா போன்ற இந்தி பேசும் மாநிலங்கள்தான்.
* இந்த மாநிலங்களில் ஆட்சியைத் தீர்மானிக்கிற சக்தியாக இருப்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள்தான்.
* இவர்களைத்தான் பாஜக, தேசியவாதம் பேசியும், பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சி விவகாரம், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் போன்ற ‘இந்துத்வா’ கொள்கைகளை முன்னெடுத்தும், பரப்புரைச் செய்தும் ஒற்றைக்குடையின் கீழ் அணி திரட்டி வைத்துள்ளது.
தனித்து விடப்படுமா?
தற்போது ஆட்சி அதிகாரம் எங்கள் வசம் இருப்பதால் இனி இவர்களை எங்களது பக்கம் ஈர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தாய்மார்களுக்கான திட்டங்கள் என சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம். அதனால் ஒரு மாபெரும் சமூக, அரசியல் மாற்றம் ஏற்படும்.
இதன் காரணமாக,
* பாஜக-வின் பலமாக இருக்கும் BC மற்றும் OBC-யினரின் ஓட்டு வங்கி சிதறும். அவர்கள் 1990-களில் இருந்தது போன்று எங்கள் பக்கம் திரும்புவார்கள்.
* அப்படியான நிலை ஏற்படும்போது பாஜக, மீண்டும் அதன் பழைய நிலைக்கே சென்றுவிடும். அதாவது, பாஜக உயர் சாதியினருக்கானது என்ற முத்திரை குத்தப்பட்டு தனித்துவிடப்படும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்.
இப்போது மோடியின் செல்வாக்கு என்ன?
ஆனால், அப்படி ஒரு நிலைமை உருவாவதைத் தடுப்பதற்கான அனைத்து அரசியல் வியூகங்களையும் பாஜக உறுதியாக மேற்கொள்ளும் என்றாலும், அது நிச்சயம் சவால் மிகுந்ததாகத்தான் இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், இப்போதைக்குத் தேர்தல் நடந்தால் யார் அடுத்த பிரதமராக வருவார் என்ற கேள்வியுடன் பிரபல ஆங்கில ஏடான இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் நடத்திய
* கருத்துக்கணிப்பில், மோடிக்கே இன்னும் வாக்காளர்களிடம் அதிக செல்வாக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.
* மோடிக்கு ஆதரவாக 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
* அதே சமயம், ராகுல் காந்திக்கு 9 சதவீதம், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 307, காங்கிரஸ் கூட்டணிக்கு 125, இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த கருத்துக்கணிப்பு பீகாரில் நிதிஷ் குமாரால் நடந்த அரசியல் மாற்றத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 1 ம் தேதிக்கு முந்தைய நிலவரம் இது.
Nitish Effect
ஆனால், பீகார் நிகழ்வுக்குப் பின்னரான கருத்துக்கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த கூட்டணிக்கு முன்னர் கூறப்பட்ட 307 இடங்களுக்குப் பதிலாக 286 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 146 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி சந்திப்பால் சர்ச்சை: ஆளுநரின் ‘அரசியல்’ வரையறை என்ன?
“அரசியல் பற்றி விவாதித்தோம். அதைப்பற்றி இப்போ உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாது” என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடனான சந்திப்புக்குபிறகு, பத்திரிகையாளர்களிடம் ரஜினி பற்றவைத்த நெருப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.
‘ஆளுநர் மாளிகை என்ன அரசியல் பேசும் கூடாராமா?’ எனக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொதிக்கும் நிலையில், ரஜினி சந்திப்பு தொடர்பான சர்ச்சை மற்றும் ஆளுநரின் ‘அரசியல்’ வரையறை குறித்து என்ன சொல்லப்படுகிறது என்பது தொடர்பான விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
1969 ஜுலை 19-ம் தேதி, இரவு 8.30… வங்கிகளை இந்திரா காந்தி தேசியமயமாக்கியது ஏன்..?#IndependenceDay2022
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் எடுத்த முக்கியமான நடவடிக்கையில் ஒன்றாக இன்றுவரை பேசப்படுவது வங்கி தேசியமயமாக்கல்தான். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த மிக புரட்சிகரமான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
இந்தியா 75: உலகக்கோப்பைகளும் நெகிழச் செய்த ரசிகர்களும்..!
ஒரு சுதந்திர தேசமாக நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கிறோம்.
How to: படிக்கும் நேரத்தில் தூக்கத்தை தவிர்ப்பது எப்படி?
‘நடிகையே கவர்ச்சிதான்… அதற்குமேல் கவர்ச்சி உடை என்றால்..?’ – சரோஜாதேவி பதில்கள்
நீங்கள் புகழுடன் விளங்கியபோது இருந்த படவுலகிற்கும், இன்றைக்கிருக்கும் படவுலகிற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூற முடியுமா?
“காமிரா, இசையமைப்பு ஆகியவற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால், கதையமைப்பின் தரம் தாழ்ந்திருக்கிறது. உணர்ச்சி வயப்படக் கூடிய கதைகளைப் படமாக எடுக்காமல், பொழுது போக்கிற்காகத்தான் படங்களைத் தயாரிக்கிறார்கள்…”
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 02.09.1973 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த சரோஜாதேவியின் பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…