கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தொழிற்துறையில் நிகழ்ந்த பெரிய மாற்றங்களில் ஒன்று ஊழியர்கள் பணிபுரியும் சூழல். சர்வதேச அளவில் பல நாடுகளும் பெருந்தொற்றினை கட்டுப்படுத்த, லாக்டவுன் கட்டுப்பாடுகளை அமல்படுத்தின.
இதனால் பற்பல நிறுவனங்களும் தங்களது பணிகளை தொடரும் விதமாக,வீட்டில் பணிபுரிய அனுமதி கொடுத்தன.
இந்த ஆப்சன் நிறுவனங்களுக்கு பலனளிக்கவே, இதையே தொடரலாமா? என்றும் கூட பல நிறுவனங்களும் ஆலோசித்து வருகின்றன.
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ஜிஎஸ்டியா? உண்மை நிலவரம் என்ன?
நிறுவனங்களுக்கு பயன்
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வரும் நிலையில் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக பல நிறுவனங்கள் கூறியுள்ளன. இது ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, நிறுவனங்களுக்கும் பற்பல பலன்களை அளித்துள்ளதாக இது குறித்தான ஆய்வுகளில் படுத்துள்ளோம். ஒருபுறம் ஊழியர்களுக்கு வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு என பலவும் மிச்சம். எல்லாவற்றுக்கும் மேலாக விலை மதிப்புமிக்க நேரமும் மிச்சம்.
பிளெக்ஸி பணியமர்த்தல்
இதே நிறுவனத்தின் செலவையும் குறைக்கும். நிறுவனங்களுக்கான உற்பத்தி திறனையும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் நிறுவனங்களின் செலவினையும் இது குறைத்துள்ளது.
சில நிறுவனங்கள் பிளெக்ஸி பணியமர்த்தலையும் அமல்படுத்தியுள்ளன. இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணி புரியலாம். அலுவலகத்தில் இருந்து பணி புரியலாம்.
ஆய்வு
கிரீன்பீஸின் சமீபத்திய ஆய்வின் படி, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதையோ அல்லது ஹைபிரிட் மாடல் பணி புரிவதை குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது பிளெக்ஸிசிட்டி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
கோவிட் – 19 லாக்டவுன்களுக்கு முன்பும், பின்பும் காற்றின் தரம் எப்படி இருந்தது. எப்படி இருக்கிறது என்பதை பார்த்தது.
‘காற்றின் தரம் அதிகரிப்பு
இந்த ஆய்வின் படி காற்றின் தரம் பெங்களூரில் சற்று மேம்பட்டுள்ளது. எப்போது வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிய தொடங்கினார்களோ அப்போதில் இருந்து, ரோடுகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் லாக்டவுனுக்கு பிறகு காற்றின் தரம் மீண்டும் குறைந்துள்ளது. விழாக்காலங்களில் விலக்கு அளிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் போது போக்குவரத்து நெரிசல் 35% பெங்களூரில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏராளமான ஐடி நிறுவனங்கள்
லாக்டவுன் காலகட்டத்தில் தொழில் துறைகள் பலவும் முடங்கின. வாகனங்களின் போக்குவரத்து குறைந்து. இதுவும் இந்த முனேற்றத்திற்கு காரணம் என்றாலும், இது யோசிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட 5 டிராபிக் பகுதிகள் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கு அருகே உள்ளன.
ஐடி ஊழியர்களுக்கும் காற்றுக்கும் என்ன சம்பந்தம்?
ஆக ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதால் காற்றின் தரம் மேம்படுவதை உறுதி செய்ய முடிகிறது. ஆக இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது நீட்டிக்கப்படலாம். அப்படி நீடித்தால் இது சுற்றுசூழலுக்கும் உதவும்.
Will work from home help in the future? What does the research report say?
Will work from home help in the future? What does the research report say?/WFH-ல் இவ்வளவு நன்மை இருக்கா.. பெங்களூரின் எதிர்காலம் இப்படி தான் இருக்குமா?