ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பாக அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்தவேண்டும் எனக் கூறியதால் பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த பிரச்னையில் அமைச்சர் சென்றபோது அவரது காரை நிறுத்தி முற்றுகையிட்டு அதன்மீது காலணி வீசினர். இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது காலணி வீசியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM