இங்கிலாந்தில் கடும் குடிநீர் பஞ்சம்; பரிதவிக்கும் மக்கள்

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம்: பிரிட்டனில் வரலாறு காணாத வகையில் கோடை காலம் மிகவும் உக்கிரமாக இருந்து வரும் நிலையில்,  பல நகரங்கள் தற்போது வறட்சியை எதிர்கொள்கின்றன. மேலும் பல நகரங்களை வறட்சி பாதித்த நகரங்களாக அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் மக்கள் தங்கள் தேவைக்காக பாட்டில் தண்ணீரையே நாடுகிறார்கள்

திடீரென்று கடைகளில் அவற்றின் தேவை அதிகரித்ததால், சில கடைகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பாட்டில் தண்ணீர் எண்ணிக்கையை குறைத்துள்ளன. லண்டனில் உள்ள பல் பொருள் அங்காடி ஒன்று ஒரு வாடிக்கையாளருக்கு 3-5 பாட்டில் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டியுள்ளது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு இந்த நோட்டீஸ் அகற்றப்பட்டாலும், பல கடைகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 

டெய்லி மெயில் பத்திரிக்கையில், அறிக்கையில், லண்டனில் உள்ள பல்பொருள் அங்க்கடி ஒன்றில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டுப்பாடு அவசியம்” என்று எழுதப்பட்டுள்ளது. சில வாடிக்கையாளர்கள் கடையின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அறிவிப்பு அகற்றப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது பிரிட்டன் மிகப்பெரிய அளவில்  வறட்சியை எதிர்கொள்கிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில், இங்கிலாந்தின் பெரும்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதை செய்த பிறகு, இப்போது அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மற்றும் வணிக நீரைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

தென்மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் கிழக்கு இங்கிலாந்து முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இங்கிலாந்து முழுவதும் வெப்ப அலை நீடிக்கிறது. தெற்கு இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் வரை வெப்பம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க | கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம்

மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.