இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பம் ஏலம் முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பதும் தெரிந்ததே.
4 மிகப்பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் அந்த நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் ஆக இருப்பதை அடுத்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சுமார் 6 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்… இந்தியன் ரயில்வே அறிவிப்பு

5ஜி தொழில்நுட்பம்
உலகின் பல நாடுகளில் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் அமலில் இருக்கும் நிலையில் இந்தியாவில் தற்போது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி டேட்டா ஆகிய நான்கு முக்கிய தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பதும், ஒரு வாரம் நடைபெற்ற இந்த ஏலத்தில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது என்பது தெரிந்ததே.

6000 வேலைவாய்ப்புகள்
இந்த நிலையில் ஏலம் எடுத்த நிறுவனங்கள் அடுத்த கட்டமாக 5ஜி தொழில்நுட்பத்தை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் படுவதால் இந்தியாவில் அடுத்த காலாண்டில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் புதிதாக கிடைக்கும் என்றும் குறிப்பாக ஆபரேட்டர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கேபிள் பதிக்கும் நபர்கள் அதிக அளவில் தேவை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேலைக்கு எடுக்கப்பட்ட ஊழியர்கள்
2021 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்திலிருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்காக ஊழியர்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 45 சதவீத ஊழியர்களும், ஜனவரி முதல் மார்ச் மாத காலத்தில் 65% ஊழியர்களும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 75% ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

2023ல் 20,000 வேலைவாய்ப்புகள்
இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக 2023ஆம் நிதியாண்டில் தொலைத்தொடர்புத் துறையில் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் கூறுகின்றன. 5ஜி ஏலம் முடிந்து வெளியீடு திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் பிராட்பேண்ட் நடவடிக்கையை விரிவுபடுத்த தொடங்கி உள்ளதால் வேலைவாய்ப்புகளும் பெருகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5G, broadband beyond metros set to add 6,000 jobs in July-Sept Quarter
5G, broadband beyond metros set to add 6,000 jobs in July-Sept Quarter | இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்… ஆயிரக்கணக்கில் குவியும் வேலைவாய்ப்புகள்!