வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது.
சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 – 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை அடுத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, அம்பன்தோட்டா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்தது. அது தொடர்பாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும், உளவு கப்பல் இலங்கையை நோக்கி வருவதாக தகவல் வெளியானது.

இதனிடையே, சீன கப்பலுக்கு இலங்கை அரசு நேற்று அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்த கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வர உள்ளது. அங்கு 20ம் தேதி வரை நிறுத்தப்பட்டிருக்கும் என என தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement