
இளையராஜாவும் முகப்பு போட்டோவை தேசிய கொடியாக மாற்றினார்
நம் நாடு 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று(ஆக.,13) முதல் வீடு தோறும் மூன்று தினங்களுக்கு வீட்டில் கொடியேற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பலரும் பின்பற்ற தொடங்கி உள்ளனர். மேலும் சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கும்படி கேட்டிருந்தார் பிரதமர். திரையுலகினர் பலரும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் ரஜினி, பிரசன்னா, செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட வெகுசிலரே தங்களின் சமூகவலைதள முகப்பு போட்டோவை மாற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளரும், சமீபத்தில் ராஜ்சபா எம்பியாகவும் பொறுப்பேற்ற இளையராஜாவும் சமூகவலைதளத்தில் தனது முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார்.