சென்னை: ஆர்டர்லி விவகாரத்தில், டிஜிபியையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
காவல்துறையைச் சேர்ந்த உயர்அதிகாரிகள் வீடுகளில் பல காவலர்கள், வீட்டு வேலைகளுக்காக ஆர்டர்லிகளாக பணியாற்றி வருகின்றனர். இது பல காவலர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில், நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், தமிகஅரசும், காவல்துறையும் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள நீதிபதி, டிஜிபி மற்றும் தமிழகஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, ரோசம் அடைந்த டிஜிபி சைலேந்திரபாபு, அதிகாரிகள் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் காவல்துறை அதிகாரிகளின் ஆ லோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி அறிவுறுத்தி உள்ளார். மேலும், உத்தரவை செயல்படுத்தாத காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது! டிஜிபிஎயை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம்…