வங்கிகள், காப்பீடு மையங்கள் உள்ளிட்ட நிதி மையங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி தொகை உரிமை கோரப்படாமல் இருக்கும் நிலையில் இந்த தொகை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.
உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து உரிமை கோரப்படாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொகை விரைவில் அவரவர் வாரிசுதாரர்களுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டும் வருமான வரிவிதிப்பில் தளர்வு…. நிதியமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!

உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை
இறந்துபோனவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் உரிமை கோரப்படாத தொகை, அதேபோல் பல ஆண்டுகளாக உயிரோடு இருந்தும் வங்கி கணக்கில் இருக்கும் பணம் குறித்த எந்தவிதமான பரிமாற்றமும் இல்லாமல் இருக்கும் தொகை ஆகிய உரிமை கோரப்படாத தொகை பல்லாயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

பத்திரிகையாளர் மனுதாக்கல்
இந்த தொகையை சட்டபூர்வமாக வாரிசுதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் நடைமுறையை உருவாக்க வேண்டும் என பிரபல பத்திரிக்கையாளர் சுஷெட்டா தலால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்
இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவில் சுஷெட்டா தலால் கூறிய புள்ளிவிபரங்கள் குறித்து விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ரூ.40,000 கோடி
பத்திரிகையாளர் சுஷெட்டா தலால் மனுவில் முதலீட்டாளர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு மையத்தில் 2019ஆம் ஆண்டு ரூ.18,381 கோடி உரிமை கோராமல் இருந்தது என்றும் இந்த தொகை 2020 ஆம் ஆண்டில் ரூபாய் 33 ஆயிரத்து 114 கோடியாகவும், 2021 ஆம் ஆண்டில் ரூ. 39 ஆயிரத்து 264 கோடியாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதாவது உரிமை கோரப்படாமல் சுமார் ரூ.40,000 கோடி உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் முதலீட்டாளர்கள் கல்வி பாதுகாப்பு மையத்தில் உரிமை கோராமல் கடந்த 1990ஆம் ஆண்டு ரூ.400 கோடியாக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் ரூ.4100 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்துள்ளார்.

விழிப்புணர்வு
இந்த உரிமை கோரப்படாத தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த தொகை அவரவர் வாரிசுதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் ஆன்லைன் தொகுப்பை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைனில் தரவுகள்
ஆன்லைனில் உரிமை கோரப்படாத வங்கி கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் பெயர், முகவரி மற்றும் அவர் கடைசியாக பரிமாற்றம் செய்த தொகை தேதி ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். அதேபோல் ரிசர்வ் வங்கிக்கு செயல்படாத கணக்குகள் குறித்த விவரங்களை அனைத்து வங்கிகளும் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறையை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

வாரிசுகள்
சரியான நடவடிக்கை எடுத்தால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கிக்கணக்கில் உரிமை கோராமல் இருக்கும் பணம் கிடைக்கும் என்றும், அதற்கு ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

நோட்டீஸ்
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது உரிமை கோராமல் இருக்கும் தொகை குறித்த மத்திய தகவல் தொகுப்பை உருவாக்குவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, செபி ஆகிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கூடிய விரைவில் உரிமை கோராமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அந்தந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Unclaimed funds: SC notice to Centre on plea seeking creation of centralised online database
Unclaimed funds: SC notice to Centre on plea seeking creation of centralised online database | உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.40,000 கோடி… சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு!