கடன் வாங்கியவர்களை தொல்லை செய்ய கூடாது..!- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சொல்வது என்ன..?

கடன் பெற்றவர்களை வங்கிகள் தொடர்ந்து தொல்லை செய்வது வாடிக்கையாகியுள்ளது. இதனால் சிலர் தற்கொலை போன்ற முடிவுகளையும் எடுத்து உள்ளனர். இது சமூகத்தில் பெரும் பேசு பொருள் ஆகி உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடன் வாங்கியவர்களைஇரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைத்து கடனை செலுத்துமாறு கேட்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறுபவர்கள் மீது, கடனை திரும்பவசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகி வருகின்றன.கடுமையான வசைச்சொற்கள், அவதூறான பேச்சுக்கள் போன்ற கொடுமைகளைதாங்க முடியாமல், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றன.இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளைஏற்கனவே வெளியிட்டது.ஆனால்அவை முறையாக பின்பற்றப்படாததால், நேற்று மீண்டும்கூடுதல்உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது.

கடன் தவணையை செலுத்துமாறு, இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்இந்த புதிய உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள்ஆகிய அனைத்திற்கும்பொருந்தும் என்றும்ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.