கனடாவில் தீவிரமாக பரவும் குரங்கம்மை..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளை, மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று நோய் பரவி அச்சுறுத்தி வருகிறது. குரங்கம்மை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. உடலில் கொப்பளங்கள் போல் பரவும் இந்த நோய், தற்போது உலகை பயமுறுத்தி வருகிறது.

பல்வேறு நாடுகளில் குரங்கம்மை தொற்றால் உயிர் பலியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட குரங்கம்மை தொற்றால் சிலர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை மிக வேகமாக பரவி வருகிறது. குரங்கம்மை கனடா நாட்டில் அதிகமாக பரவி வருவதாகவும், இதுவரை சுமார் 1059 பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .

உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உள்பட 50க்கும் மேலான நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் கனடாவில் ஏறக்குறைய 1,059 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தேசிய அளவிலான குரங்கு அம்மை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருவதாகவும் நோய்க்கு தடுப்பு ஊசிகளை செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் ஏற்க்கனவே குரங்கம்மை நோயை அவசர நிலையாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.