கருணைக் கொலை செய்துகொள்ள வெளிநாடு செல்லும் நண்பர்… தடுத்து நிறுத்த போராடும் தோழி!

நொய்டாவில் வசிக்கும் 48 வயதான ஆண் ஒருவருக்கு மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் (Myalgic Encephalomyelitis) என்ற நோய் ஏற்பட்டிருக்கிறது. இந்த அந்த நபர் 2014 முதல் நாள்பட்ட சோர்வு, உடல்நலக்குறைவு, (Brain fog) நினைவு இழப்பு, தலைவலி, தூக்கக் கலக்கம், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஒரு சகோதரியும், எழுபது வயதைக் கடந்த பெற்றோரும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இனி மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என முடிவு செய்த அந்த நபர், இந்தியாவில் தற்கொலை மற்றும் கருணைக் கொலைக்கு அனுமதி இல்லை என்பதால் சுவிட்சர்லாந்திற்குச் சென்று மருத்துவரின் உதவியால் கருணை கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். இதை அறிந்த அவரின் தோழி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவரின் வெளிநாட்டு பயணத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

விமானம்

அதில், “எனது நண்பரின் உடல் நோயால், மன உளைச்சலில் கருணைக் கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அவருக்குச் சிறந்த சிகிச்சைகளை வழங்குவதற்கு நிதித் தடைகள் எதுவும் இல்லை. ஆனால், அவர் கருணைக்கொலை செய்துகொள்ளும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

இது வயதான பெற்றோரின் வாழ்க்கையையும் மோசமாகப் பாதிக்கிறது. அந்த நபர் டெல்லி எய்ம்ஸில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். ஆனால், கொரோனா பெருந்தொற்றால் அவரால் சிகிச்சையைத் தொடர முடியவில்லை. அதனால் ஒரு சில அடிகள் தான் எடுத்துவைக்க முடிகிறது. மற்றபடி அவர் படுக்கையில்தான் இருக்கிறார்.

நீதி மன்றம்

கருணைக் கொலை செய்துகொள்வதற்கான உளவியல் சிகிச்சைக்கான முதல் சுற்றுக்காக, கடந்த ஜூன் மாதம் பெல்ஜியம் வழியாகச் சூரிச் சென்றார். ஆனால், அவர் விசா விவகாரங்களில் பெல்ஜியத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற விரும்புவதாகத் தவறான தகவல்கள் வழங்கி 26 ஐரோப்பிய நாடுகளுக்குத் தடையற்ற பயணத்தை அனுமதிக்கும் விசாவைப் பெற்றிருக்கிறார். எனவே, அவர் கருணை கொலை செய்துகொள்ள வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும்” என முறையிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.