சென்னை: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்ட ஆந்திரா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொசஸ்தலை குறுக்கே புதிய அணை கட்டுவது சென்னை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
