நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது இங்க வர்றீங்க என கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது? ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பி.டி.ஆருக்கு என்ன தகுதி உள்ளது? உயிரிழந்த லட்சுமணனுக்கு மருத்துவம் பார்த்து உள்ளேன். அவர் குடும்பத்திற்கு எனக்கு தெரியும்.
திமுக கட்சியை வைத்து வெற்றி பெற்றவர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை. அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம். நிதியமைச்சருக்கு சவால் விடுகிறேன்.
இவங்கள எதுக்கு உள்ள விடுறீங்க என பொதுமக்களை பார்த்து அமைச்சர் பி.டி.ஆர். கேட்டார். தலைக்கனம் பிடித்த அமைச்சர் பி.டி.ஆர். நிதியமைச்சரை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
தரம் தாழ்ந்து அமைச்சர் பிடிஆர் இன்று நடந்து கொண்டார். நாங்கள் அந்த சம்பவத்தை செய்தோமா, அங்கு ஏராளமானோர் இருந்தனர் நீங்கள் சட்டரீதியாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்களும் சட்ட ரீதியாக அணுகுகிறோம். பி.டி.ஆர் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை பதிவு செய்வோம்.
நிதியமைச்சர் பாஜக மீது கை ஓங்கி இருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதிமுகவை பார்த்து வெளியே போக சொல்லாதவர், பாஜகவை காழ்ப்புணர்ச்சியோடு வெளியே போக சொல்லி உள்ளார் என்றார் சரவணன்.
செய்தியாளர் செந்தில் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“