டில்லியில் இளம்பெண்ணுக்கு குரங்கம்மை| Dinamalar


புதுடில்லி: டில்லியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளார். தற்போது, டில்லியில் குரங்கம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.