டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் – எஃப்.பி.ஐ தகவல்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 8 ஆம் தேதி எஃப்.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவருக்கு புளோரிடா மாகாணத்தில் மார்-ஏ-லகோ என்ற எஸ்டேட் உள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது ரகசிய ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்து சென்றதாகவும், அந்த ஆணங்களை இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் வைத்து இருப்பதாகவும் புகார் எழுந்தது.

அந்த ரகசிய ஆவணங்களை கண்டுபிடிப்பதற்காக டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனைக்கு டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் இருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சோதனைக்கான வாரண்ட், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த விவரங்களை எப்.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். சீலிடப்பட்ட அந்தக் கவரை பிரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, புளோரிடா நீதிபதி அதனை பிரித்தார்.

Salman Rushdie: ‘சல்மானை கத்தியால் குத்திய’…ஹாதி மாடர் குறித்த 5 முக்கிய தகவல்கள்: தீவிரவாத அமைப்புடன் தொடர்பு?

அதில், அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ரகசிய ஆவணங்கள் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் கைப்பற்றப்பட்டதாகவும், பிரான்ஸ் அதிபர் குறித்த தகவல்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதுமட்டுமின்றி சோதனையில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக “வாஷிங்டன் போஸ்ட்” செய்தி வெளியிட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.