சென்னை:
விஜய்,
நித்யா
மேனன்,
காஜல்
அகர்வால்,
எஸ்.ஜே.
சூர்யா
ஆகியோர்
நடிப்பில்
2017ம்
ஆண்டு
வெளியான
திரைப்படம்
‘மெர்சல்.’
அட்லீ
இயக்கத்தில்
பிரமாண்டமாக
உருவான
‘மெர்சல்’
திரைப்படத்திற்கு
ஏ.ஆர்.
ரஹ்மான்
இசையமைத்திருந்தார்.
ஏ.ஆர்.
ரஹ்மான்
இசையில்
இந்தப்
படத்தின்
எல்லா
பாடல்களும்
சூப்பர்
ஹிட்
ஆனது.
புதிய
கூட்டணியில்
மெர்சல்
பிரமாண்ட
இயக்குநர்
என
பெயர்
எடுத்த
ஷங்கரின்
சிஷ்யனாக
திரையுலகில்
அடியெடுத்துவ்
வைத்தவர்
அட்லீ.
முதலில்
‘ராஜா
ராணி’
படத்தை
இயக்கிய
அட்லீ,
அடுத்து
விஜய்
நடிப்பில்
‘தெறி’
படத்தை
இயக்கினார்.
கலவையான
விமர்சனங்களை
பெற்ற
‘தெறி’
கமர்சியலாக
ஹிட்
ஆனதோடு,
வசூலுக்கும்
பஞ்சமில்லாமல்
பார்த்துக்கொண்டது.
இதனைத்
தொடர்ந்து
அட்லீ,
விஜய்,
ஏ.ஆர்.
ரஹ்மான்
கூட்டணியில்
‘மெர்சல்’
திரைப்படம்
உருவானது.
பாடல்களில்
மிரட்டிய
ஏ.ஆர்.
ரஹ்மான்
‘உதயா’,
‘அழகிய
தமிழ்
மகன்’
படங்களுக்குப்
பிறகு
விஜய்,
ஏ.ஆர்.
ரஹ்மான்
கூட்டணியில்
இந்தப்
படம்
உருவானதால்,
அதிக
எதிர்பார்ப்பு
காணப்பட்டது.
அதற்கு
குறைவைக்காமல்,
ஏ.ஆர்.
ரஹ்மானும்
வெரைட்டியாக
பாடல்களை
கம்போஸ்
செய்து,
செம்ம
ஹிட்
கொடுத்தார்.
குறிப்பாக
‘மெர்சல்’
படத்தில்
இடம்பெற்ற
‘ஆளப்போறான்
தமிழன்’
பாடல்,
இளைஞர்களின்
தேசிய
கீதமானது.
வைரலான
ஆளப்போறான்
தமிழன்
விவேக்
வரிகளில்
ரஹ்மான்
இசையமைத்த
“ஆளப்போறான்
தமிழன்’
பாடல்,
ரசிகர்களை
கொண்டாட
வைத்தது.
ரஹ்மானின்
இசை
நாடி
நரம்புகளை
முறுக்கேற்ற,
விவேக்கின்
வீரம்
விளைந்த
வரிகள்
கேட்பவர்களை
புல்லரிக்க
வைத்தது.
ரசிகர்கள்
முதல்
பலரின்
செல்போன்
ரிங்டோனிலும்
‘ஆளப்போறான்
தமிழன்’
பாடலே
ஒலித்தது.
யூடியூப்பிலும்
16
கோடிக்கும்
அதிகமான
பார்வைகளை
கடந்து
புதிய
உச்சம்
தொட்டது.
ஆளப்போறான்
தமிழனுக்கு
5
வயது
மெர்சல்
படத்தைத்
தொடர்ந்து,
அட்லீ
–
விஜய்
–
ஏ.ஆர்.
ரஹ்மான்
கூட்டணி
‘பிகில்’
படத்திலும்
இணைந்து
மாஸ்
காட்டினர்.
விஜய்
தற்போது
‘வரிசு’
படத்தில்
பிஸியாக
இருக்க,
அட்லீ
இந்தியில்
ஷாருக்கானின்
‘ஜவான்’
படத்தை
இயக்கி
வருகிறார்.
அதேபோல்
ஆஸ்கர்
நாயகன்
ஏ.ஆர்.
ரஹ்மானும்
‘பொன்னியின்
செல்வன்’,
‘கோப்ரா’,
‘மாமன்னன்’
ஆகிய
படங்களில்
பிசியாக
உள்ளார்.
இந்நிலையில்,
‘ஆளப்போறான்
தமிழன்’
பாடல்,
வெளியாகி
5
ஆண்டுகள்
நிறைவடைந்துள்ளது.
இதனை
சோனி
நிறுவனம்
டிவிட்டரில்
அறிவிக்க,
விஜய்
ரசிகர்கள்
‘தமிழன்டா
எந்நாளும்’
என
கொண்டாடி
வருகின்றனர்.