தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெஜெநகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குலதெய்வ கோயிலில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் ஆடி மாத திருவிழா, நேற்று காலை முகூர்த்தக் கால் நடுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சக்தி கரகரம் அழைத்து வரப்பட்டது. பின்னர் இரவு ஏழு மணி அளவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் பூசாரி முனுசாமி காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் வீரபத்திரசாமி சரித்த நாடகம் நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தேங்காய் உடைக்கும் போது, தலையில் ரத்தமோ, வலியோ ஏற்படாது.  இது போன்ற வினோத வழிபாடு மேற்கொள்ளும் போது வருடம் முழுவதும் உடல் நல கோளாறு ஏற்படாது எனவும், பஞ்சம் நீங்கி நாடு செழிப்படையும் என்பது ஐதீகம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.