திடீரென பெண்கள் போராட்டம்.. துப்பாக்கியால் அடித்து விரட்டிய தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!

காபூல்: ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்திய பெண்களை தாலிபான்கள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரம் முழுமையாக தாலிபான்கள் வசம் வந்தது.

வெளியேறிய மக்கள்

கடுமையான பழமைவாத சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறினர். குறிப்பாக பலர் விமானங்களில் தொங்கியபடி கூட்டம் கூட்டமாக பயணித்த காட்சிகளையும் தொலைக்காட்சி வழியாக உலக நாடுகள் பார்த்தன. எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலம் போல் தற்போதைய ஆட்சி இருக்காது என தாலிபான்கள் கூறினர். உலக நாடுகளும் இதையேதான் தாலிபான்களிடம் வற்புறுத்தி வந்தன.

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

முதலில் இதையெல்லாம் செய்வதாக ஒப்புக்கொண்டிருந்த தாலிபான்கள், நாள் போக போக தங்கள் பழமைவாத கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கினர். குறிப்பாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புர்கா அணிய வேண்டும். வேலைகளுக்கு செல்லக்கூடாது. டூவீலர் ஓட்டக்கூடாது. ஓட்டலில் ஆண், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது, 70 கி.மீட்டருக்கு மேலான தொலை தூர பயணங்களுக்கு ஆண் துணையின்றி செல்லக்கூட்டாது, பெண்களுக்கான இடைநிலைக்கல்வி நிலையங்களை மூடியது என அடுக்கடுக்கான நடவடிக்கைகளை தாலிபான் அரசு எடுத்தது.

பெண்களுக்கான உரிமை

பெண்களுக்கான உரிமை

ஆனாலும், தாலிபான்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பெண்களுக்கான உரிமைகளை கிடைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் மொனேசா முபரேஸ். தாலிபான்களின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சகம் துறை நீக்கப்பட்டு இருக்கும் நிலையில், மொனேசா முபேரஸ் இது பற்றி கூறுகையில், ”ஆப்கானிஸ்தானில் ஒரு உள்நாட்டு போர் முடிந்து விட்டது. ஆனால், பெண்களுக்கான சரியான உரிமையை நிலைநாட்டுவதற்கான உரிமை மீட்பு போராட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்” என்றார். ஆனாலும் மெனசோ உள்பட பெண் உரிமைக்காக போராடும் பெண்கள் பலரும் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் வீடுகள் போன்ற இடங்களில் ஆலோசனையை நடத்தி வந்தனர்.

உரிமை வேண்டும் என போராட்டம்

உரிமை வேண்டும் என போராட்டம்

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி நாளையுடன் ஓர் ஆண்டு ஆகிறது. பெண்களுக்கான உயர் கல்வி உரிமையும் பறிக்கப்பட்டது ஆப்கானிஸ்தான் பெண்களுகு மட்டும் அல்லாது உலக அளவில் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு போராட்டத்தில் பெண்கள் திடீரென ஈடுபட்டனர். 40 க்கும் மேற்பட்ட பெண்கள், வேலை மற்றும் சுதந்திர உரிமை கோரி கோஷம் எழுப்பினர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கருப்பு தினம் என்ற பேனர்கள் வைத்திருந்த பெண்கள், தங்களுக்கு வேலை செய்யும் உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

துப்பாக்கியால் அடித்தனர்

துப்பாக்கியால் அடித்தனர்

ஆப்கானிஸ்தானின் கல்வி அமைச்சகம் நோக்கி வந்த போராட்டக்காரர்களை தாலிபான்கள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்து போராட்டக்காரர்களை கலைத்தனர். கலைந்து ஓடிய பெண்களில் சிலர் அருகில் இருந்த கடைகளில் தஞ்சம் அடைய முற்பட்டனர். ஆனால், அவர்களை விடாது துரத்திய தாலிபான்கள், தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் அடித்தனர்.

விரட்டியடித்த தாலிபான்கள்

விரட்டியடித்த தாலிபான்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான பெண்கள் தங்கள் அடையாளம் எதையும் மறைவிக்கவில்லை. முகத்திரை அணியாமல் போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர். எங்களுக்கு நீதி வேண்டும், நீதி வேண்டும், அறியாமையால் சலித்துவிட்டோம் என்று கோஷங்களை பல பெண்கள் எழுப்பினர். ஆப்கானிஸ்தானில் பல மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இத்தகைய போராட்டத்தை படம் பிடிக்க சென்ற பத்திரிகையாளர்களும் தாலிபான்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. தாலிபான்கள் பத்திரிகையாளர்களையும் அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.