ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது .
வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு பாஜக மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் 50 பாஜகவினர் குவிந்தனர்.
இறந்த ராணுவ வீரர் உடலுக்கு பாஜக சார்பில் முதலில் மரியாதை செலுத்தப்படும் என அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
தேசிய கொடி மீது தாக்குதல் நடத்தி நமது கொடியை அவமதிக்கும் இந்த கீழ்தரமான கும்பல் தான் இன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற சொல்கிறது!#SHAMEonBJP.
All those in this clip need to be arrested & booked under stringent sections @tnpoliceoffl
IF NOT cadre may take matter into their hands. https://t.co/MHmvV71wFM pic.twitter.com/bRCDrHc5Ot— Dr. T R B Rajaa (@TRBRajaa) August 13, 2022
இதற்கு அமைச்சர் பிடிஆர் அரசு சார்பில் மரியாதை செலுத்திய பிறகு மரியாதை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அராஜக மொத்த சங்கி கும்பல் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை @tnpoliceoffl @CMOTamilnadu pic.twitter.com/bquLgC0RoO
— Sonia Arunkumar (@rajakumaari) August 13, 2022
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் ஏறி சென்ற போது, இதில் அதிருப்தியடைந்த பாஜகவினர் அமைச்சர் காரை முற்றுகையிட்டு செருப்பை வீசியுள்ளனர்.
1:34Sec : செருப்பை கைல எடுத்துக்கன்னு ஒருத்தி சொல்றா.. பக்கா Planned.. கடும் நடவடிக்கைகள் எடுத்தாகனும்.. @mkstalin @ptrmadurai pic.twitter.com/yJFezL6j5Z
— ஆல்தோட்டபூபதி (@thoatta) August 13, 2022
தேசிய கொடி கட்டப்பட்ட அமைச்சர் காரின் மீது செருப்பு வீசியதை வன்மையாக கண்டித்தும் செருப்பு வீசிய வன்முறை கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.