தேசிய கொடி வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்திய மோடியின் தாயார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி:’ நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்றும் இயக்கத்தில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் 100 , தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு தேசிய கொடியை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

நாட்டின், 75வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும், 13 – 15ம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விட வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.

latest tamil news


இதையொட்டி இன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வரும் பிரதமர் மோடியின் தாயார் ஹீாபென் , தனது வீட்டில் குழந்தைகளுக்கு தேசிய கொடியை விநியோகித்து ஊக்கப்படுத்தினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.