வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 4 அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மேலும் 4 அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து, கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். அதன்படி , பயங்கரவாதி பரூக் அஹ்மத் தர்ரின் மனைவியும், 2011ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஜம்மு காஷ்மீர் நிர்வாக பிரிவை சேர்ந்த அஸ்பா அர்ஜூமந்த் கான், காஷ்மீர் பல்கலையில் பணிபுரிந்த முகீத் அகமது பட், காஷ்மீர் பல்கலையின் மூத்த பேராசிரியர் மஜீத் ஹூசைன் கத்ரி, காஷ்மீர் தொழில்முனைவோர் வளர்ச்சி கழக மேலாளர் சையத் அப்துல் முயீத் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement