Tamil Radio news reader Saroj Narayanaswamy passed away: அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய சரோஜ் நாராயணசுவாமி இன்று மரணமடைந்தார்.
’செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி…’ 1980, 90களில் தினந்தோறும் அனைவரின் வீடுகளிலும் ஒலிக்கும் குரல் இது தான். அன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாக இருந்த வானொலியில், காலை 7.15 மணிக்கு வரும் செய்திகளையே அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருப்பர்.
இதையும் படியுங்கள்: ஆள்மாறாட்டம்; திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவருக்காக தேர்வு எழுத வந்தவர் கைது
அத்தகைய காலைச் செய்தியை தன் கணீர் குரலால் அனைவருக்கும் கொண்டு சேர்த்தவர் தான் ஆகாசவானி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாயாரணசுவாமி. அகில இந்திய வானொலியின் தமிழ் செய்தி வாசிபபாளரான சரோஜ் நாராயணசுவாமி, ஒலிப்பரப்பு துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தவர்.
செய்தி வாசிப்பாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நிலையில், பிறகு திரைத்துறையில் பல்வேறு பணிகளை செய்து வந்தார். ஒலிப்பரப்புத் துறையில் சரோஜ் நாராயணசுவாமியின் பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
30 ஆண்டுகளுக்கு மேலாக வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சரோஜ் நாராயணசுவாமி இன்று காலமானார். அவரது ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil