சென்னை: லைகர் படத்தின் மூலம் இந்திய ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்த காத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகர் விஜய்யை போல அந்த ஆசை வந்து விட்டதாம்.
இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், அனன்யா பாண்டே மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி உள்ள லைகர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான ஆசையை வெளிப்படுத்தி உள்ளார் விஜய் தேவரகொண்டா.
ரக்கட் பாய்
அர்ஜுன் ரெட்டி படத்தில் படு போல்டாக நடித்து ஒட்டுமொத்த இளம் பெண்களுக்கும் Rugged பாய்களை பிடிக்க காரணமானவே நம்ம விஜய் தேவரகொண்டா தான். லைகர் படத்தில் சிங்கமும் புலியும் சேர்ந்த கலவையாக மேலும், பாய்ந்து மிரட்ட காத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. நாயகி அனன்யா பாண்டே உடன் புரமோஷன்களில் பிசியாகி உள்ள அவர் தனது அந்த ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

அப்படியொரு போஸ்
ரன்வீர் சிங்கின் நிர்வாண டிரெண்டிங்கிற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டா தான் லைகர் படத்திற்காக ஆடையின்றி வெறும் ரோஜா பூங்கொத்தை மட்டும் அந்த இடத்தில் பிடித்துக் கொண்டு மறைத்தபடி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த ஹீரோயின்களையும் வாவ் சொல்ல வைத்திருந்தார்.

விஜய்க்கு வந்த ஆசை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கான யூனிவர்ஸை உருவாக்கி கைதி படத்துக்கும் விக்ரம் படத்துக்கும் கனெக்ஷன் கொடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த நிலையில், தளபதி 67 படத்தையும் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸ் படமாகவே உருவாக்க முழு சுதந்திரத்தையும் விஜய் கொடுத்துள்ளார் என்றும், விஜய்க்கும் அந்த யூனிவர்ஸில் நடிக்க ஆசை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் தேவரகொண்டாவுக்கும் விருப்பம்
இந்நிலையில், விஜய்யை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவும் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் நடிக்க வெறித்தனமாக காத்துக் கொண்டிருப்பதாகவும், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களுக்கும் தான் தீவிர ஃபேன் என்றும் பேசி உள்ளார்.

போன் வருமுன்னு வெயிட்டிங்
மேலும், இப்போ நான் பேசியதை பார்த்து விட்டாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனக்கு போன் பண்ணுவாருன்னு காத்திட்டு இருக்கேன் என லைகர் படத்தின் சென்னை புரமோஷனில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கமலின் பேரன்
விக்ரம் படத்தில் விக்ரம் என பெயர் வைத்து கமல் வளர்த்து வரும் அந்த பேரனாக விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைத்தால் தியேட்டர் தீப்பிடிக்கும் என ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவுக்கு சரியான என்ட்ரியையும் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் கணித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் என்ன பிளான் வைத்துள்ளார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..