சென்னை: தமிழக அரசு ஹஜ் மானிய தொகை உயர்த்தி வழங்கியிருப்பது இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதற்காக,தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், ஹஜ் கமிட்டி உறுப்பினரும் நாகூர் தர்கா பிரசிடன்டுமான செய்யது முஹம்மது கலீபா சாஹிப் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெயிட்ட அறிக்கையில், ஒன்றிய அரசு ஹஜ் விமான பயண கட்டணத்திற்கான மானியத்தை நிறுத்தியது, அதனை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு மானிய தொகை வழங்க தொடங்கியது. ஒவ்வொருவருக்கும் தலா ₹10,000 முதல் அதிகபட்சமாக₹15000 வரை தான் வழங்கப்பட்டு வந்தது.என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த ஆண்டும் இதே முறையில்தான் வழங்க ஆலோசனை நடந்தது. ஆனால் மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்கள் மூலமாக இம்முறை கொச்சி விமான நிலையம் சென்று, திரும்பியதால் ஹாஜிகளுக்கு கூடுதல் செலவினமாக மானிய தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வந்தார்கள்.
அதன்படி ஹாஜிகள் ஒவ்வொருக்கும் தலா ₹27,628 வீதம் மொத்தம் ₹ 4.56 கோடி மாண்புமிகு முதல்வர் அவர்களின் திருக்கரங்களால் 5 ஹாஜிகளுக்கு வழங்கி நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
அனைத்து ஹாஜிகளுக்கும் அவரவர் வங்கி கணக்கில் மாநில அரசின் மானிய தொகை பத்து வங்கி வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனை சாத்தியமாக்கி தந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக ஹாஜிக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்வதாக செய்யது முஹம்மது கலீபா சாஹிப் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ