பெங்களூரு : இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து, பெங்களூரில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய மூன்று வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.கடந்த வாரம், மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த ஷியான் தாஸ், 25; நிகிலேஷ் தாஸ், 34; அமின் முகமது சவுத்ரி, 27, ஆகிய மூவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையில், மூவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர்.
மூவரும் கைது செய்யப்பட்டனர். 2013ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள், மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தனர்.அடையாள அட்டை, ஆதார் அடையாள எண், இந்திய பாஸ்போர்ட் கிடைத்தவுடன் பெங்களூரு வந்தனர். இங்கு பல நிறுவனங்களில் பணியாற்றியது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாக, போலீசார் நேற்று தெரிவித்தனர்.பெங்களூரு, ஆக. 13-
இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து, பெங்களூரில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய மூன்று வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.கடந்த வாரம், மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த ஷியான் தாஸ், 25; நிகிலேஷ் தாஸ், 34; அமின் முகமது சவுத்ரி, 27, ஆகிய மூவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர். மூவரும் கைது செய்யப்பட்டனர். 2013ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள், மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தனர்.அடையாள அட்டை, ஆதார் அடையாள எண், இந்திய பாஸ்போர்ட் கிடைத்தவுடன் பெங்களூரு வந்தனர். இங்கு பல நிறுவனங்களில் பணியாற்றியது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாக, போலீசார் நேற்று தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement