சென்னை: அபூர்வ ராகங்கள் படத்தில் தொடங்கி அண்ணாத்த வரை தனது காந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஒரே மன்னன் சூப்பர்ஸ்டார் ரஜினி தான்.
திரைத்துறையில் சுமார் 47 வருடங்கள் மாறாத எனர்ஜி உடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்தின் 47 ஆண்டுகள் திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில் #47YearsOfRajinismCDP என்கிற ஹாஷ்டேக்கை உருவாக்கி அட்டகாசமான சிடிபியை பல சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
பெயருக்குள்ளே காந்தம்
அவன் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா என பாட்ஷா படத்திலேயே ரஜினிகாந்தின் பெருமையை பாடலாக பாடி விட்டனர். அந்த காந்த சக்தி இன்னமும் கொஞ்சம் கூட மங்காமல் ஜெயிலர் படத்திலும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து திருவிழா கொண்டாட்டத்தை நடத்தப் போவது கன்ஃபார்ம்.
7 மொழிகள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் என நடிகர் ரஜினிகாந்த் 7 மொழிகளில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் டாப் ஹீரோக்களுக்கும் சூப்பர்ஸ்டாராக கெத்துக் காட்டி வருகிறார். அப்பவே ஹாலிவுட் படமான பிளட் ஸ்டோனில் நடித்து அசத்தி விட்டார் ரஜினிகாந்த்.
47 வருட ரஜினிஸம்
அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்ணாத்த வரை 47 வருடங்களை சினிமாவில் செலவழித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மகிழ்வித்தவர் நடிகர் ரஜினிகாந்த். அமெரிக்கா, ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
காமன் டிபி வெளியீடு
ரஜினிகாந்தின் 47 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக ஸ்பெஷலான காமன் டிபி வடிவமைக்கப்பட்டு தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் தேசிங் பெரியசாமி, நடிகை வேதிகா, காமெடி நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி வைக்க வேண்டும் என தனது வீட்டில் கொடியேற்றிய பின்னர் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்திருந்தார். பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் தனது புரொஃபைல் பிக்சரையும் தேசியக் கொடியாக சமீபத்தில் மாற்றியது குறிப்பிடத்தக்கது.