சென்னை:
இயக்குநர்
வெங்கட்
பிரபுவிடம்
உதவியாளராக
இருந்து
சினிமாவில்
அடியெடுத்து
வைத்தவர்
பா.
ரஞ்சித்
தான்
இயக்கிய
முதல்
படமான
‘அட்டகத்தி’
மூலம்
பலரது
கவனத்தையும்
ஈர்த்திருந்தார்.
கார்த்தியுடன்
மெட்ராஸ்,
ரஜினியுடன்
கபாலி,
காலா
என
அடுத்தடுத்து
சூப்பர்
ஹிட்
படங்களை
இயக்கியுள்ளார்.
அட்டகத்தியில்
அமர்க்களமான
அறிமுகம்
கோலிவுட்டில்
முன்னணி
இயக்குநராக
மட்டுமில்லாமல்,
நம்பிக்கைக்குரிய
படைப்பாளராக
பார்க்கப்படுபவர்
பா.
ரஞ்சித்.
வெங்கட்
பிரபுவிடம்
உதவி
இயக்குநராக
பணியாற்றிய
பா.
ரஞ்சித்,
‘அட்டகத்தி’
படம்
மூலம்
தமிழ்த்
திரையுலகின்
கவனத்தை
ஈர்த்தார்.
முதல்
படத்திலேயே
புறநகர்
சென்னையின்
பின்னணியில்
அழுத்தமான
அரசியலைப்
பேசிய
ரஞ்சித்,
அதனுடன்
அழகிய
காதலையும்
அது
கடந்துசெல்லும்
யதார்த்தத்தையும்
பதிவு
செய்திருந்தார்.
இந்தப்
படத்தின்
மூலம்
சந்தோஷ்
நாராயணனும்
இசையமைப்பாளராக
என்ட்ரி
கொடுத்தார்.

கார்த்தியுடன்
கட்டியெழுப்பிய
மெட்ராஸ்
ரஞ்சித்
வடசென்னையை
பூர்வீகமாக
கொண்டிருந்ததால்,
அவர்
இயக்கிய
இரண்டாவது
படமான
‘மெட்ராஸ்’,
இன்னும்
இயல்பாக
உருவானது.
வடசென்னை
கதைக்களத்தில்
சுவரையும்
ஒரு
பாத்திரமாக
வைத்துக்கொண்டு,
அதிகார
அரசியலையும்
சந்தர்ப்ப
அரசியலையும்
சாதியத்தின்
பின்னணியில்
அதிநுட்பமாக
கட்டியெழுப்பினார்.
கார்த்தி,
கலையரசன்,
கேத்ரீன்
தெரசா
என
பலரும்
நடித்திருந்த
‘மெட்ராஸ்’,
தமிழ்
சினிமாவில்
மிகப்
பெரிய
தாக்கத்தை
ஏற்படுத்தியது.

சூப்பர்
ஸ்டாருடன்
மாஸ்
கூட்டணி
‘மெட்ராஸ்’
படத்தின்
பிரமாண்ட
வெற்றியைப்
பார்த்த
ரஜினி,
ரஞ்சித்துடன்
கூட்டணி
வைத்தார்.
துயரங்களால்
துவண்டுப்போன
மலேசியவாழ்
தமிழகத்
தேயிலைத்
தோட்டத்
தொழிலாளர்களின்
வாழ்வியலைப்
பின்னணியாகக்
கொண்டு
உருவானது
‘கபாலி.’
தேயிலைத்
தோட்டத்
தொழிலாளரான
ரஜினி
கேங்ஸ்டராக
மாறுவதையும்
அதன்
பின்னணியையும்,
தனது
அரசியல்
பார்வையில்
அற்புதமாக
அடிகோடிட்டுக்
காட்டியிருந்தார்
ரஞ்சித்.
இந்தப்
படம்
ரஜினிக்கும்
ரஞ்சித்துக்கும்
மாஸ்
ஹிட்
கொடுத்து,
வசூலிலும்
சக்கைப்போடு
போட்டது.

காலங்கடந்தும்
கரைபுரண்ட
காலா
‘கபாலி’
வெற்றியைத்
தொடர்ந்து
ரஜினி
–
ரஞ்சித்
கூட்டணி
‘காலா’
படத்தில்
மீண்டும்
இணைந்தனர்.
அடுத்தடுத்து
சூப்பர்
ஸ்டாருடன்
ரஞ்சித்
இணைந்தது,
பலரையும்
ஆச்சரியப்பட
வைத்தது.
அதைவிட
சிறப்பான
சம்பவத்தை
‘காலா’
படத்தில்
அரங்கேற்றியது
இந்த
சூப்பர்
காம்போ.
ஆனாலும்,
இந்தப்
படம்
வெற்றியா…
தோல்வியா?
என்ற
விவாதத்தோடு
முடங்கிப்
போனது.
உண்மையில்
காலாவே
தான்
இயக்கிய
படங்களில்
பெஸ்ட்
என,
ரஞ்சித்
வெளிப்படையாக
தெரிவித்ததை
ரசிகர்களும்
காலம்கடந்து
ஏற்றுக்கொண்டனர்.

பலே
சார்பட்டா
பரம்பரை
காலாவை
அடுத்து
கொஞ்சம்
இடைவெளி
விட்டு
பா.
ரஞ்சித்
இறங்கி
அடித்த
திரைப்படம்
‘சார்பட்டா
பரம்பரை.’
1970
முதல்
80
வரையிலான
காலக்கட்டத்தை
அப்படியே
திரையில்
நகலெடுத்த
ரஞ்சித்,
குத்துச்சண்டை
பின்னணியில்
மிக
அடர்த்தியான
வடசென்னையின்
வரலாறைப்
பேசினார்
இந்தப்
படத்தின்.
காட்சிகளும்
வசனங்களும்,
சாதியத்தின்
பொய்யான
பெருமைகளையும்
பிதற்றல்களையும்
பொளேர்
பொளேர்
என
ஓங்கி
அறைந்தது.

கலங்கரை
விளக்கான
நீலம்
இயக்குநராக
மட்டும்
நின்றுவிடாமல்
தன்னைப்
போன்ற
எளிய
பின்னணியில்
இருந்து
வரும்
கலைஞர்களுக்கான
கலங்கரை
விளக்காக
இருக்கும்
வகையில்,
நீலம்
தயாரிப்பு
நிறுவனத்தைத்
தொடங்கினார்
ரஞ்சித்.
பரியேறும்
பெருமாள்,
இரண்டாம்
உலகப்
போரின்
கடைசிக்
குண்டு,
ரைட்டர்
என
தயாரிப்பிலும்
தரமான
படங்களை
கொடுத்து,
பலரது
பாராட்டுகளை
பெற்றார்.

எதிர்பார்ப்பில்
விக்ரம்
61
ரஞ்சித்
இயக்கிய
‘நட்சத்திரம்
நகர்கிறது’
திரைப்படம்
வரும்
31ம்
தேதி
வெளியாகவுள்ளது.
இந்தப்
படத்திற்கு
ரசிகர்களிடம்
அதிக
எதிர்பார்ப்பு
காணப்படுகிறது.
இதனைத்
தொடர்ந்து
முதன்முறையாக
விக்ரமுடன்
கூட்டணி
வைத்துள்ளார்
ரஞ்சித்.
விக்ரமின்
61வது
படமாக
உருவாகும்
இது,
தமிழ்
சினிமாவில்
இன்னும்
பல
தரமான
சம்பவங்களை
நிகழ்த்தும்
என்பதில்
சந்தேகமே
இல்லை
என்கின்றனர்
ரசிகர்கள்.
இந்நிலையில்,
இயக்குநராக
10
ஆண்டுகளை
நிறைவுசெய்துள்ள
பா.
ரஞ்சித்துக்கு,
திரைப்
பிரபலங்கள்
உள்ளிட்ட
பலரும்
வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும்
தெரிவித்து
வருகின்றனர்.