ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து எரிபொருள் தயாரித்து, அதனை அமெரிக்க நகரங்களுக்கு கடல் வழியாக இந்தியா ஏற்றுமதி செய்வதாக கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து, அதனை சுத்திகரிப்பு செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது கவலையளிக்கிறது என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் – ஜியோ எதில் அதிக லாபம்? . ரிலையன்ஸ் காலாண்டு அறிக்கை குறித்த ஒரு பார்வை!

மைக்கேல் பத்ரா
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிப்பு செய்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருளை, அவற்றை நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களுக்கு கடல் வழியாக இந்தியா கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு தடைகள்
உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. சில நாடுகள் ரஷ்யாவின் முக்கிய வணிகமான, எண்ணெய் வணிகத்திலேயே கைவைக்கும் விதமாக எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்துள்ளன. இதனால் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முடியும் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டன.

தடைகளை மீறிய இந்தியா செயல்படுகிறது?
ஆனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா தள்ளுபடி விலையில், எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. கச்சா எண்ணெய் மட்டும் அல்ல, நிலக்கரி, கேஸ் உள்ளிட்ட பல பொருட்களும் தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்து வருகின்றது.
இதனால் ரஷ்யாவின் ஆட்டத்தை எப்படியேனும் தடுத்து விடலாம் என்று நினைத்த நாடுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதற்கிடையில் தான் ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி இந்தியா செயல்படுவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்க கருவூலத்துறையின் புகார்
இந்திய கப்பல் ஒன்று ரஷ்யாவின் எண்ணெய் கப்பலில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு, கடல் வழியாக குஜராத்தில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு கொண்டு வந்திருப்பதாக அமெரிக்க கருவூலத்துறை புகார் தெரிவித்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா கூறியுள்ளார்.

ரஷ்ய பொருளுக்கு தடை
குஜராத்தில் உள்ள அந்த துறைமுகத்தில் வைத்து அந்த கச்சா எண்ணெயை சுத்திகரித்து, மீண்டும் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய நிறுவனங்கள் அனுப்புவதாக பத்ரா கூறியுள்ளார். ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளின் படி, ரஷ்யாவில் இருந்து எண்ணெய், எண்ணெய் சார்ந்த பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இறக்குமதியாளர்
ஆனால் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் சுத்திகரித்து, அதை இந்திய கப்பல் நியூயார்க் போன்ற நகரங்களுக்கு எடுத்து செல்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
உலகிலேயே கச்சா எண்ணெய் அதிக அளவு இறக்குமதியை செய்யும் நாடுகளில் இந்தியாவும் 3வது இடத்தில் உள்ளது. எனினும் இன்றளவிலும் ரஷ்யாவில் இருந்து பெறப்படும் எண்ணெயின் அளவு குறைவு தான் என கூறப்படுகிறது.
India buys oil from Russia and exports it to USA: RBI Deputy governor michael patra
India buys oil from Russia and exports it to USA: RBI Deputy governor michael patra/இந்தியா அந்த தவறை செய்கிறது.. எச்சரிக்கும் அமெரிக்கா.. ஏன்?