குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பங்களாபுத்தூர் சாலையில் கழுகூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது எதிர் திசையில் சிறுகமணியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பெட்டவாய்த்தலைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
இந்நிலையில், இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுகமணியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் கழுகூரைச் சேர்ந்த கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
