உ.பி.,யில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாளை (ஆக., 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து சென்று வருகின்றனர்.

latest tamil news

இந்நிலையில், கான்பூரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஹபிபுல் இஸ்லாம் என்ற சைபுல்லா(19) என்பவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பயங்கரவாதி, சமூக வலைதளங்கள் மூலம் எல்லை தாண்டிய நபர்களுடனும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முகமது நதீம் என்பவனுடனும் தொடர்பிலும் இருந்தது தெரியவந்தது. இவனிடமிருந்து மொபைல்போன், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.