எரிபொருள் விநியோகத்தில் இன்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்படும் புதிய மாற்றம்


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்(QR) முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று  நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும்.

குறைந்த வரிசைகள் 

இம்மாதம் முதலாம் திகதி முதல் QR முறைப்படி எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் விநியோகத்தில் இன்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்படும் புதிய மாற்றம் | New Procedure In Fuel Delivery From Midnight Today  

இந்தநிலையில், எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட வரிசை குறைந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விடுத்துள்ள பணிப்புரை

இதேவேளை, QR முறைக்கு வெளியே எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் இன்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்படும் புதிய மாற்றம் | New Procedure In Fuel Delivery From Midnight Today

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் வெளியீடு குறித்த தரவுகளை சரிபார்த்து, உரிய முறைக்கு புறம்பாக எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.