சென்னை:
கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு, அவரது உடலுக்கு தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து கிளம்பி செல்லும் போது தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில், வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.