கோல்கட்டா:தேசியக் கொடியை ஏற்ற, மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளதாக பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் புகார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. இங்கு தெற்கு மிதுனபுரியில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்தில், சுதந்திர தினத்தையொட்டி நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் இங்கு தேசியக் கொடியை ஏற்றுவதாக இருந்தது. ஆனால் அங்கு சென்றபோது, அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றாமலேயே அவர் திரும்பினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றுவதற்காக சென்றேன். ஆனால் சிறார்
சீர்திருத்த இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.இதில் அங்குள்ள அதிகாரிகள் மீது எனக்கு வருத்தமில்லை. மாநில அரசின் உத்தரவை அவர்கள் செயல்படுத் தியுள்ளனர். சுதந்திர போராட்ட தியாகி களுக்கு மேற்கு வங்க அரசு தரும் மரியாதை இவ்வளவு தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
”மாநிலம் முழுதும் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்து வருகிறது. ஆனால், வீண் அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது,” என, திரிணமுல் காங்.,கைச் சேரந்த ராஜ்யசபா எம்.பி., சுகேந்து சேகர் ராய் பதிலடிகொடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement