கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம்: பாஜக மாநில துணைத் தலைவர் கைது

கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் நடந்த 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் துவங்கி வைத்தார். தொடர்ந்து பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர். அப்பொழுது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும் படி வலியுறுத்தினர்.
ஆனால் கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே பி ராமலிங்கம் தலைமையிலான வந்த பாஜகவினர் பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள கதவின் பூட்டை கல்லால் உடைத்து திறந்து, பாரதமாதா திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த குறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சம்பவத்தில், முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சிவலிங்கம், ஆறுமுகம், ஒன்றிய தலைவர் சிவசக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் மௌனகுரு, முன்னாள் நகர தலைவர் மணி ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பாஜக மாநில துணை தலைவரும் முன்னாள் எம்.பியுமான கே.பி.இராமலிங்கத்தை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பாஜக மாநில துணை தலைவரும் முன்னாள் எம்.பியுமான கே.பி.இராமலிங்கத்தை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.