சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்: தமிழக அரசு  

சென்னை: 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுச் சேவைக்கான பதக்கங்கள் மற்றும், காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:-

  • பிரேம்ஆனந்த்சின்ஹா, இ.கா.ப.,கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), சென்னை பெருநகர காவல்.
  • அம்பேத்கார், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடலூர்.
  • சு. சிவராமன்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், அடையாறு போக்குவரத்து காவல் நிலையம்,சென்னை பெருநகர காவல்.
  • வை. பழனியாண்டி,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், இ2 மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம்,மதுரை மாநகரம்.
  • மா.குமார்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஜே-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையம், தாம்பரம் காவல் ஆணையரகம்.

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

  • கோ. ஸ்டாலின், காவல்துறை துணை ஆணையாளர், தலைமையிடம், மதுரை மாநகரம்.
  • ச. கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்தகுற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ,சேலம் மாநகரம்
  • மா. பிருந்தா, காவல் ஆய்வாளர், ரோஷனை காவல் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
  • அ.பிரபா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாமக்கல் மாவட்டம்.
  • வீ. சீனிவாசன், காவல் ஆய்வாளர், ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையம், சென்னை மாநகரக் காவல்.
  • மா.சுமதி, காவல் ஆய்வாளர்,அனைத்து மகளிர் காவல் நிலையம், கொடைக்கானல்,திண்டுக்கல் மாவட்டம்.
  • சி. நாகலெட்சுமி, காவல் ஆய்வாளர், கரியாப் பட்டினம் காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.
  • வெ.துளசிதாஸ், காவல் உதவி ஆய்வாளர், ட்டீ-12, பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
  • ச.ல. பார்த்தசாரதி, காவல் உதவி ஆய்வாளர், குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, ஒருங்கிணைந்த குற்ற அலகு-1, சென்னை.
  • கா.இளையராஜா, காவல் உதவி ஆய்வாளர், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழக முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.