சென்னை: சுயமரியாதை இயக்கத்தை சீண்டி பார்த்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராகவே பாஜக தொடர்ந்து செயல்படுவதாக டாக்டர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். மேலும் திமுக எனது தாய் வீடு, அதில் இணைந்தால் தவறில்லை என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.
