தங்கம் விலையானது கடந்த வார தொடக்கத்தில் விலை குறைந்தாலும், வார இறுதியில் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்தது. வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு மேலாக காணப்படுகிறது.
பணவீக்கம் எதிர்பார்த்ததை விட சற்று குறைந்திருந்தாலும், டாலரின் மதிப்பு உச்சத்தில் இருந்தாலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகிறது.
இது தங்கம் விலையில் அழுத்ததினை தானே ஏற்படுத்தனும்? அப்புறம் எப்படி ஏற்றம் கண்டு வருகின்றது. வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே ஆரம்பித்த பிரச்சனை.. அச்சத்தில் உலக நாடுகள்!

அதிகரிக்கலாம்
தொடர்ச்சியாக 4வது வாரமாக தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகின்றது. இது கடந்த வாரத்தில் மட்டும் 1.37% காணப்படுகிறது. நிபுணர்களின் அறிக்கைகளின் படி தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் 10 கிராமுக்கு 53,500 ரூபாயினை தொடலாமென்றும் கூறுகின்றனர். இத் சர்வதேச சந்தையில் 1760 – 1820 என்ற லெவலுக்கு இடையில் வர்த்தகமாகலாம். இது மீடியம் டெர்மில் 1850 டாலர் என்ற லெவலுக்கு அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். இது பணவீக்கத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் இன்டெக்ஸ்
அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இது கடந்த வாரத்தில் 104.63 என்ற லெவலில் காணப்பட்டது. இது வரும் வாரத்தில் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து 104.50 என்ற லெவலுக்கு மேலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு டாலரின் மதிப்பானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தால், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவின் சில்லறை விற்பனை
வரவிருக்கும் வாரத்தில் அமெரிக்கா ஃபெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி கூட்டமும், அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான தரவும் வெளியாகவுள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான தரவாக பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ரூபாய் VS டாலர்
அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு 109.30 என்ற லெவலை எட்டிய பிறகு,இது மீண்டும் 104.50 என்ற லெவலை எட்டியது. ஆக வரவிருக்கும் வாரத்தில் இதுவும் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். ஆக உள்நாட்டு முதலீட்டாளர்கள் இதிலும் கவனம் செலுத்தலாம்.

பொருளாதார தரவுகள்
வரவிருக்கும் வாரத்தில் பொருளாதாரம் குறித்தான தரவுகள் வெளியாகவுள்ளன. இது தவிர உற்பத்தி குறித்தான தரவு, பில்டிங் பர்மிட், வீடு விற்பனை உள்ளிட்ட டேட்டாகளும் வெளியாகலாம். இது தவிர இங்கிலாந்தில் சிபிஐ, ஐரோப்பாவின் சிபிஐ மற்றும் ஜிடிபி தரவுகளும் முக்கிய பங்கு வகிக்கலாம். இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
gold price on 14th August 2022: Crude oil price to US Dollar 5 factors determining gold price
gold price on 14th August 2022: Crude oil price to US Dollar 5 factors determining gold price/ தங்கம் விலையை வரும் வாரத்தில் தீர்மானிக்க போகும் 5 காரணிகள்.. குறையுமா?