சென்னை: சமூக நீதியில் தமிழகத்தை விட உத்தரபிரதேசம் சிறப்பாக உள்ளதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ். இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 13) மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சாமுவேல்ராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள தீண்டாமை குறித்து தெரியப்படுத்தியவுடன், அதற்கான சிறப்பு அரசாணையை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 386 ஊராட்சிகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 20 ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றமுடியாத நிலை, நாற்காலியில் அமர முடியாத நிலை உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகள் இருப்பதை ஆதாரத்துடன் தெரியப்படுத்தினோம். இதையொட்டி, தலைமைச் செயலர் இறையன்பு சிறப்பு அரசாணையை வெளியிட்டு ஆகஸ்ட் 15-இல் அனைத்து ஊராட்சிகளிலும் பாகுபாடின்றி தேசிய கொடியை ஏற்றுவதை உறுதிசெய்வோம் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் சமூகநீதியை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.
தமிழகத்தில் தீண்டாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டோம். ஆனால், உத்தரபிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் இதேபோன்று ஆய்வையே மேற்கொள்ள முடியாது. பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 20-ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர் காடிக் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜிநாமா கடிதத்தில் கடுமையான தீண்டாமை ஒழிப்பு நிலவுவதை காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2019, 2020 ஆகிய 2 ஆண்டுகளில் பட்டியலினத்து மக்களுக்கு எதிராக 36,467 குற்றங்கள் நடந்துள்ளன. அதே சமயத்தில் தமிழகத்தில் 3,831 குற்றங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள தீண்டாமை குறித்து தெரியப்படுத்தியவுடன், அதற்கான சிறப்பு அரசாணையை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தை விட உத்தரபிரதேசம் சிறப்பாக உள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிக்கிறார். இதனை தீண்டாமை ஒழிப்பு முன்னணி அனுமதிக்காது என்றார். அப்போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சரின் தூண்டுதல் பேரில் திமுகவினரும், காவல் துறையினரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜகவினர் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.