தேசிய கொடியை புறக்கணிக்கனுமாம்; மடாதிபதி பகீர் விளக்கம்; பா.ஜ.க ஷாக்!

புதுடெல்லி அடுத்துள்ள காஜியாபாத்திப் மகாகால் தாஸ்னா மடத்தின் தலைவராக இருப்பவர் யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி. சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டுவது யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதியின் வழக்கம்.

இந்நிலையில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு மற்றொரு சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற அந்த வீடியோவில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி‘மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்களால் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது.

எனவே, வீடுதோறும் தேசிய கொடி என்பதற்கு பதிலாக காவி கொடியை ஏற்றுங்கள். தேசியக் கொடி தயாரிக்கும் ஒப்பந்தத்தை மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சலாவுத்தீன் என்பவர் எடுத்துள்ளார்.

இந்துக்களிடம் நான் கேட்கிறேன். வீட்டில் தேசிய கொடி ஏற்றுவதை புறக்கணியுங்கள். அதற்கு பதிலாக காவி கொடியை ஏற்றுங்கள். தேசியக்கொடி கண்டிப்பாக ஏற்றுவதற்கு விரும்புபவர்கள் வீடுகளில் பழைய தேசிய கொடிகள் இருந்தால் ஏற்றுங்கள்.

தற்போது முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் தேசிய கொடிகளை ஏற்ற வேண்டாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் இந்துக்களிடம் இருந்து தேசியக் கொடிக்கான விலையை பெற்று அந்த பணத்தில் இந்துக்களை கொல்ல சதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது’ என மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி கூறி இருக்கிறார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா நாளை 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பிரதமர் மோடி 13ம் தேதி முதல் 15 தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை வைத்து இருந்தார்.

அதன்படி, பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தேசிய கொடியை முகப்பு படமாக வைத்துள்ளதோடு, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இந்த நிலையில் தேசிய கொடியை புறக்கணிக்க வேண்டும் என்று மடாதிபதி கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.