பில்லியனரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, சிறு நீரக பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை 6.45 மணிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பெரும் சோகம்.. இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்

வீல் சேரில் ஜுன்ஜுன்வாலா
சமீபத்தில் ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கியபோது கூட, நிறுவனத்தின் தொடக்க விழாவில் வீல்சேரில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சிறு நீரக பிரச்சனை உள்பட பல்வேறு உடல் நல பிரச்சனை இருந்ததாகவும் கூறப்பட்டது.

நான் தோல்விக்கு தயாராக இருக்கிறேன்
விமான போக்குவரத்து துறையில் பல சவாலான நிலைகள் இருந்து வந்த நிலையில், பல நிறுவனங்களும் திவால் நிலைக்கே கூட தள்ளப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் ஏன் விமான நிறுவனம் தொடங்குகிறீர்கள் என்ற ஜுன்ஜுன்வாலாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நான் தோல்விக்கு தயாராக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

மாறுபட்ட அணுகுமுறை
பங்கு சந்தை மட்டும் அல்ல, எந்தவொரு விஷயத்தையும் மாற்று கோணத்தில் அணுகும் திறன் கொண்டிருந்த ஜுன் ஜுன்வாலாவின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம். இதனாலேயே என்னவோ இவர் ஒரு பங்கினை வாங்குகிறார் அல்லது விற்கிறார் என்றாலே அது ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனம் கொண்ட ஒன்றாக இருந்து வந்தது.

பிரதமர் மோடி இரங்கல்
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா எந்த ஒரு சவாலான காலகட்டத்திலும் தோல்விக்கு பயப்படாதவர். பயமில்லாதவர். துணிச்சல் மிக்கவர். மன உறுதி கொண்டவர். எதையும் கண்டு அஞ்சாத (indomitable) துணிந்து நின்றவர். முழு வாழ்க்கை, நகைச்சுவை மற்றும் நுண்ணறிவு மிக்கவர். நிதி துறையில் அழியாத நிகழ்வுகளை விட்டுச் சென்றுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்தில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அவரது மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
Narendra Modi condoles Rakesh Jhunjhunwala
Narendra Modi condoles Rakesh Jhunjhunwala/நிதி துறையில் அழியாத நிகழ்வுகள்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு நரேந்திர மோடி இரங்கல்