ஜோகுபாளையா : மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜோகுபாளையாவில் வீடுதோறும் தேசியக் கொடி இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்.சுதந்திர அமுதப் பெருவிழாவை ஒட்டி, நாடு முழுதும் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றும்படி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.அதன் ஒரு பகுதியாக, பெங்களூரு வந்த மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., சார்பில் ஜோகுபாளையாவில் நேற்று நடந்த ஊர்வலத்தில் பங்கேற்றார்.
திறந்த வாகனத்தில் வீடுதோறும் தேசியக் கொடி இயக்கம் குறித்து பேசியபடி வந்தார். அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் அக்கட்சி தொண்டர்கள் பைக்குகளில் பங்கேற்றனர்.ஜோகுபாளையாவின் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், ஹலசூரு மெட்ரோ ரயில் நிலையம், போலீஸ் நிலையம், கேம்ப்ரிட்ஜ் லே அவுட் வழியாக வந்தன.சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள், கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அனைவரும் மூன்று நாட்களும் அவரவர் வீடுகள், இருப்பிடங்களில் தேசியக் கொடி ஏற்றும்படி கேட்டு கொண்டார்.பின், ஜெயநகர் சென்ற அவர், வீடுதோறும் சென்று சிலருக்கு தேசியக் கொடி வழங்கினார்.முன்னாள் மேயர் கவுதம் குமார், சாந்திநகர் பா.ஜ., தலைவர் சிவகுமார், கட்சி பிரமுகர் ஸ்ரீதேவிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement